நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரி ஆற்றுப் பாலத்தில், செல்ஃபி எடுக்க முயன்றபோது, சிறுவன் தன்வந்த் தவறி ஆற்றில் விழுந்து இறந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதேபோன்ற சம்பவங்கள் திருச்சியில் நடந்துவிடக் கூடாது எனப் பதறுகிறார்கள் திருச்சிவாசிகள்.